Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, யஹலதென்னையிலுள்ள "ட்ரீ ஒப் லைப்" உல்லாசப்பயண ஹோட்டல் நிறுவனம் சுற்றாடலை பாதுகாப்பதற்காக நடத்திய சித்திர போட்டியில் வெற்றபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் நிறுவனத்தின் தலைவர் ஜப்பானை சேர்ந்த தகாஷி ஷிகனகா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஜப்பான் தூதுக்குழுவொன்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஷர்லி தேனுவர உட்பட பலரும் கலந்துகொண்டனர். சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற சித்திரங்களின் கண்காட்சியொன்றும் இங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


1 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Oct 2025