2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சிறுத்தை தாக்கியதால் சிறுமி காயம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

சிறுத்தை  ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய 9 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில்
நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.  நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய தோட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சிறுத்தைப் புலியின் தாக்குதலுக்கு உள்ளான இந்தச் சிறுமி தனது சித்தியுடன் குளிக்கச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தை ஒன்று சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

இதன் போது சிறுமியின் சித்தி வீறிட்டுக் கதறவே சிறுத்தை தப்பிச் சென்றுள்ளது. சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுமியின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச்சம்பவத்தில் இம்புல்பிட்டிய தோட்டத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான ரூபிக்கா என்ற சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X