Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
சர்வதேச சிறுவர் தினத்தன்று பண்டாரவளை பிரதேச சிங்கள பாடசாலை ஒன்றில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பினால் மாணவனொருவன் காயமடைந்து அட்டாம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
கடந்த வெள்ளிக்கிழமை உயர்தர வகுப்பு மாணவர்கள் நால்வர் குறித்த தாக்குதலுக்குள்ளான மாணவனிடம் பணம் கேட்டே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக புகாரிடப்பட்டுள்ளது.
தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட நான்கு உயர்தர வகுப்பு மாணவர்களை பண்டாரவளை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 4ஆம் திகதி பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
09 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
09 Aug 2025