2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வருமான ஊக்குவிப்பு மாதம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச சபை தனது வருமானத்தை அதிகரிப்பதற்காக ஒக்டோபர் மாதத்தை வருமான ஊக்குவிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன் இம்மாதம் முழுவதும் பிரதேச சபைக்கு வரி மூலம் சேர வேண்டிய வருமானத்தை சேகரிப்பதற்கு விஷேட திட்டங்கள் அமுல்படுத்திள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்ஸான் தெரிவித்தார்.

இதேவேளை வருமான வரியை சேகரிப்பதற்காக அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கிய 10 நடமாடும் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதேச சபைக்கு முறைப்படி செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முறையாக செலுத்தாவிட்டால் 1987 இல: 15ஆம் சட்டத்தின் கீழ் அவர்களுடைய உடமைகளை சுவீகரிப்பதற்கு அதிகாரம் உள்ளதாகவும் பிரதேச சபை தலைவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .