Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை தொகுதியில் நான்கு நகர மற்றும் கிராமிய குடிநீர் விநியோகத் திட்டங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டி.எம்.ஜயரட்ன மக்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வுகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், ஏர்ள் குணசேகர மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்
புசல்லாவ ரொட்சைட், அட்டபாகை, கலத, மரியாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன. இவற்றின் மூலம் கம்பளை நகரத்திற்கும் உடபலாத்த பிரதேச பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் கம்பளை மரியாவத்தையில் குடிநீர் வாடிக்கையாளர் பணிமனையொன்றும் திறந்து வைக்கப்பட்டது.
கலதயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ன உரையாற்றுகையில்,
நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் மக்கள் பங்களிப்பு அவசியமாகும். இப்பங்களிப்பு காணப்படும் போது மட்டுமே மக்கள் பயனடைய முடியும் கிராமிய குடிநீர் விநியோகத்திட்டங்களை உருவாக்கி பராமரிப்பதில் மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவில் இருகக் வேண்டும்.
அரசு சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று அபிவிருத்தி திடடடங்களை மேற்கொள்கின்றது. சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் கடன்கள் திருப்பி செலுத்தப்பட வேண்டியதாகும். எனவே மக்கள் இவ்வுதவிகள் இலவசமாக கிடைப்பதாக கருதி செயற்படக்கூடாது.
இலங்கை மக்கள் இலவசமாக கிடைக்கும் உதவிகளை நம்பியுள்ளனர். இம்மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும். நாம் உழைப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். நாட்டில் மக்கள் மத்தியில் நற்பண்புகளைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு மதங்களின் பங்களிப்பு அவசியமாகும். எனவே பௌத்த , இந்து , இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களை தொடர்புபடுத்தி சிறந்த சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமொன்றை மாவட்ட மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில்,
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பக்க பலமாக அமைந்துள்ளன. முன்னர் எமது குடிநீர் விநியோக திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்கியது. ஆனால் இத்திட்டங்களை முன்னெடுப்பதில் மக்கள் காட்டும் அக்கறையை கருத்தில் கொண்டு கடனில் பல சலுகைகள் கிடத்துள்ளன என்றார் அமைச்சர் தினேஸ் குணவர்தன.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago