2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முஹமட் ஆஸிக்)


கண்டி பேராதெனிய பிரதேசத்தில் மாடிக் கட்டிடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மூவர் மீது மின்சாரம் பாய்ந்ததினால் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்ற இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதெனிய, ஈரியகம என்ற இடத்தில் மாடிக்கட்டிடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது, அதி உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார கம்பி தாக்கியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக போராதனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி உபாலி நாரம்பனாவ தெரிவித்தார்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .