Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துடன் சேர்ந்து தேர்தலுக்கு முகம் கொடுப்பதா தனித்து நிற்பதா என்பதை கட்சி வெகுவிரைவில் தீர்மானிக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை மாலை அக்குறணையில் வைத்து தெரிவித்தார்.
இன்று மாலை அக்குறணை நகரில் கட்சி ஆதரவாளர்களுடன் நடாத்திய கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்...
நாங்கள் தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதனால் உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதா என்று பலரும் வினவுகின்றனர். இக்கேள்விக்கு தகுந்த பதிலை கட்சி வெகுவிரைவில் தீர்மானிக்கும். இருந்தபோதும் முழு இலங்கைக்கும் ஒரே தீர்மானம் எடுப்பதா அல்லது பிரதேச ரீதியாக ஏற்ற தீர்மானத்தை எடுப்பதா என்பதை பற்றியும் கட்சி ஆராயும் என்றும் அவர் இங்கு கூறினார்.
முஸ்லிம்கள் தமக்கு தேவையான அபிவிருத்தியை செய்துகொள்வதற்கு முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
Miseran Sunday, 26 December 2010 02:37 PM
கடைசியாக.... 'உணர்ந்துவிட்டார்! வழிக்கு வந்துவிட்டார்!' என்று நம்புவோம். சமுகத்திற்காக இனியாவது விழிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படுங்கள்.
Reply : 0 0
xlntgson Sunday, 26 December 2010 08:36 PM
தேர்தல் வந்தால் தான் திண்டாட்டம், யார் வெற்றி பெறுவார்கள் என்று முற்கூட்டியே தெரிந்தால் வெல்லும் பக்கத்தில் தான் இருக்க வேண்டும். வினைத்திறனுக்கு, என்ன, அப்படித்தானே?
எப்போதும் நாங்கள் ஆளுங்கட்சி!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago