Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
தம்புள்ளை - குருணாகலை பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கப்ரக வாகனமொன்று லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த கப்ரக வாகன சாரதியும் மற்றுமொரு நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த (வயது 40) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட லொறியின் சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .