Suganthini Ratnam / 2011 நவம்பர் 17 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
நாட்டின் சட்டங்களை மீறி அரசாங்கத்தின் பணத்தை எந்தவித நிறுவனங்களுக்கும் வழங்க முடியாதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி, பல்லேகலை சர்வதேச பௌத்த நிலையத்தில் கண்டி மாவட்டத்திற்கான இணைப்புக்குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'அரசாங்கத்தின் பணத்தை கையாளும் முறையொன்று உண்டு. அதற்கு அப்பால் எவருக்கும் அரசாங்கப் பணத்தை கையாள முடியாது. இந்த நிலையிலேயே அபிவிருத்தி வேலைகளுக்கான பணம் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படுகின்றன. அரசாங்கப் பணத்துக்கு பொறுப்புக் கூறும் கடப்பாடு மாவட்ட செயலாளருக்கு உண்டெனவும் அவர் மூலமாக மத்திய அரசாங்கத்தின் பணத்தை அபிவிருத்தி திட்டங்களுக்காக கையாளும் முறையில் கையாளப்படுகின்றது' என்றார்.
இக்கூட்டத்திற்கு சிரேஷ்ட அமைச்சர் அதாவுடா செனவிரத்ன, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பிரதியமைச்சர் எர்ல் குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள், கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனவிரத்ன, அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026