2026 மே 06, புதன்கிழமை

தப்பியோடிய சந்தேக நபர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்

Janu   / 2026 மே 04 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டபோது பொலிஸ் வாகனத்திலிருந்து தப்பியோட முயன்ற நிலையில், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த இரு சந்தேகநபர்களையும், கல்கமுவ பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸ் ஜீப் வாகனத்தில் அழைத்து செல்ல பொலிஸார் தயாராகியுள்ளனர். இதன்போது, இருவரும் திடீரென பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து தப்பியோட முயன்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் எஹெடுவெவ வீதியில் சுமார் 100 மீற்றர் தூரம் வரை ஓடியபோது, பொலிஸார் அவர்களைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு சந்தேகநபரின் காலில் துப்பாக்கிச் சூடு பட்ட நிலையில் இருவரும் மீளக் கைது செய்யப்பட்டனர்.

 துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவர் கல்கமுவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் கல்கமுவ, கொஜராகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .