2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நீர் பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


சிறுவர் அபவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் அம்பகமுவை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 66 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு நீரைப் பதப்படுத்தும் இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னனியின் அரசியல் துறைத்தலைவருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 10 இலட்சம் பெருமதியான இயந்திரங்கள் தோட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஹட்டன் டிக்கோய நகர சபைத்தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தக்குமார், மலையக மக்கள் முன்னனியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தோட்ட தலைவர்கள் மற்றும் பிள்ளை அபிவிருத்தி நிலைய பொருப்பாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X