2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

போஹாவத்தைக் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் கவலை

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போஹாவத்தைக் கீழ்ப்பிரிவு தோட்டத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சிறுத்தைகளின்; நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக போஹாவத்தைக் கீழ்ப்பிரிவு தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தோட்டத்தின் நான்கு தேயிலை மலைகளில் கடந்த பல வருடங்களாக பராமரிப்பு பணிகள் மற்றும் மீள் தேயிலைக் கன்றுகள் நாட்டல் என்பன இடம்பெறாத காரணத்தினால் குறிப்பிட்டப் பகுதி பற்றைக்காடுகளாக மாறத் தொடங்கியுள்ளன.

இதனால் காட்டிலுள்ள சிறுத்தைப் போன்ற விலங்குகளும் ஏனைய ஜந்துக்களும் இந்தப் பற்றைக்காடுகளில் அதிகரித்துள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் இவற்றினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக தோட்டக்குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்ற சிறுத்தைகள் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய்களைக் கவ்விச் செல்வதாகத் தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து தோட்ட நிர்வாகமும் வன இலாகா பிரிவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போஹாவத்தைக் கீழ்ப்பிரிவு தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X