2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண முதலமைச்சரின் நிதியில் நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தித்திட்டங்கள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் எக்கநாயக்கவிடம் தான் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க நுவரெலியா மாவட்டத்தில் 35 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்  பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகம் மற்றும் தொழிலுறவு சிரேஷ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா தெரிவித்தார்.

இந்த நிதியொதுக்கீட்டின் மூலமாக கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்டத்தில் பாலம் ஒன்றை அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாவும் லிந்துலை மவுசல்ல, லிந்துலை பம்பரகல, தலவாக்கலை கிரேட்வெஸ்டன், டிக்கோயா ஸ்டொம்பஹில் ஆகிய தோட்டங்களில் கொங்ரீட் பாதைகள் அமைப்பதற்காக தலா 5 இலட்சம் ரூபாவும் வட்டவளை லொனெக், டிக்கோயா பட்டில்கல கீழ்ப்பிரிவு, பூண்டுலோயா அகரகந்தை ஆகிய தோட்டங்களின் குடிநீர் விநியோகத்திற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் டிக்கோயா லெதண்டி தோட்டத்துக்கு அருகில் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் நோர்வூட் வெஞ்சர் லோரன்ஸ் தோட்டத்தில் கொங்ரீட் பாதை அமைப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்கள் அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X