2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மாபெரும் பொங்கல் விழாவினை முன்னிட்டு போட்டிகள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)
வருடந்தோரும் நுவரெலியா இந்து கலாசார பேரவை நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி மாதம்; 26, 27 திகதிகளில் முதல் முறையாக நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளன இந்நிகழ்வில், போட்டி நிகழ்ச்சிகளும் இலங்கையின் முன்னனி இசைக்குழுவான கருணாவின் சரி கம வழங்கும் மாபெரும் இன்னிசை விழாவும் இடம்பெற உள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி

கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்

(அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி. பெருந்தோட்டத் துறையை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுக்கள் மாட்டும் பங்குபெற முடியும்;).  முதலாம் பரிசு 15000 ரூபா, இரண்டம் பரிசு 10000 ரூபா போட்டியின் சிறந்த ஆட்ட நாயகன் 3000

அறிவிப்பாளர் போட்டி திறந்த மட்டம் (சூரியன் எப்.எம்.வானொலி அறிவிப்பாளர்களால் தேர்வு நடைபெறும்.)
 
எதிர்வரும 27 ஆம் திகதி

கோலப் போட்டி காலை 9.00 மணிக்கு சினிசிட்டா உள்ளக அரங்கு.

(ஒவ்வொரு பிரிவிலும் முதலாமிடம் 7500 ரூபா, இரண்டாமிடம் 5000.00,  மூன்றாமிடம் 2500.  10 ஆறுதல் பரிசுகள் (மாக்கோலம், பூக்கோலம் திறந்த போட்டி தனி நபருக்கானது)

சுவையான பொங்கல் வைத்தல் போட்டி (திறந்த மட்டம்) காலை 9.00 மணிக்கு சினிசிட்டா அரங்கம். முதலாமிடம் 3000 ரூபா, இரண்டாம் இடம் 1500. 

இசை நிகழ்ச்சியும், எமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பும் மாலை 1.00 மணிக்கு ஆரம்பமாகும்.

மேற்படி போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை எதிர்வரும்  ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக செயலாளர்,
இலக்கம், 25ஏ உடபுஸ்ஸல்லாவ ரோட், ஹாவேலியா என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கான பதிவுக் கட்டணம்  போட்டி நடைபெறும் தினத்தில் காலை 9.00 மணிக்கு முன்பு செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு 0777757815,

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X