2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குடும்பஸ்தர் கொலைக்கு பிரபா கணேசன் எம்.பி. கண்டனம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இரத்தோட்டை நிக்கலோயா பகுதியில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவை பார்வையிடச் சென்ற குடும்பஸ்தர்  இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பொலிஸ்மா அதிபர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும தெரிவித்ததாவது,

'மண்சரிவுக்குள்ளான இரத்தோட்டை நிக்கலோயா பகுதியை பார்வையிடச் சென்ற குடும்பஸ்தர் (3 பிள்ளைகளின் தந்ததை) இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சம்பவம் நடைபெற்றதை கேள்விப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுடன் தொடர்பு கொண்டு அவரது கவனத்திற்கு இச்சம்பவத்தை கொண்டு வந்ததன் மூலமாக மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பெரமுனவுடன் தொடர்பு கொண்டு சம்பவம் சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமலிருக்க முயற்சிகளை மேற்கொள்வதாகவும் இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடு;ப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X