2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெலிமடை பிரதேச சபையில் சர்ச்சை; சபைத்தலைவர் பலவந்தமாக வெளியேற்றம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எப்.எம்.தாஹிர், ரட்னம் கோகுலன்)


வெலிமடை பிரதேச சபையில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து சபைத் தலைவரை பலவந்தமாக வெளியேற்றி, உதவி தலைவர் சபையை நடத்திசென்ற சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.

வெலிமடை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று ஆர்.எம்.அபேசேகர தலைமையில் இடம்பெற்றது. சபை நடவடிக்கைகள் மிகவும் கால தாமதமாகியே ஆரம்பமான நிலையில் சபைத்தலைவர் உரையாற்ற ஆரம்பித்தார். இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் சபை அமர்வு காலதாமதமாகி ஆரம்பிப்பதை கண்டித்து கூச்சலிட்டனர்.

இதன்போது அதற்கு பதலளித்த சபைத்தலைவர் வெலிமடை பிரதேச சபையின் உப தலைவர் சபை நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில் தடை ஏற்படுத்தி வருவதாகவும் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் சபையை கொண்டு செல்ல முடியாதளவிற்கு செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

இதன்போது ஐ.தே.க உறுப்பினர் சிறி கௌரம்மான, சபைத் தலைவரை ஆசனத்திலிருந்து பிடித்திழுத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய சபை அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து சபைத் தலைவரை அங்கிருந்து தூக்கிச்சென்று வெளியே வெளியே வைத்துவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை உதவி தலைவர்; முன்னெடுத்தார்.

இன்றைய சபை அமர்வின் போது 21 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். ஆளும், எதிர்கட்சியினர் இதில் உள்ளடங்குவர். இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்  மாத்திரம் சபைத்தலைவருக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X