2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தேரரை 'மச்சான்' என்றவர் கைது

Kanagaraj   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்ஸிற்காக காத்திருந்த பௌத்த தேரர் ஒருவரின் தோளில் கையை போட்டு 'எப்படி மச்சான்' என்று அழைத்தவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இரத்தினபுரி பஸ் நிலையத்தில்  இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸிற்காக காத்திருந்த தேரர் ஒருவரின் தோளில் கையைபோட்ட பஸ்ஸின் சாரதியே 'எப்படி மச்சான்' என்று அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேரர் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது மேற்படி பஸ் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X