2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யுத்தக் காட்சிகளை தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹொமட் ஆஸிக்

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்  நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கண்டி மாத்தளை வீதியில் வைத்து இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்நபரின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் மேற்படி வீடியோக்  காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபரிடம் அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X