2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கெட்டபுலா தோட்ட மத்திய பிரிவில் சிறுவனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சுவர்ணஸ்ரீ

நுளம்பு வலை இருகிய நிலையில்  பாடசாலை மாணவர்; ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டி, கெட்டபுலா தோட்ட மத்திய பிரிவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

தரம் 8 இல் கல்வி கல்வி பயின்று வந்த வீரமணி இரேஷன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

பாடசாலைக்குச் செல்லாது வீட்டிலிருந்த மேற்படி சிறுவன் வழமைபோல் தனது வீட்டின் படுக்கையறையிலுள்ள நுளம்பு வலையை பிடித்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோர் சிறுவனின் அறைக்கு சென்று பார்த்போது அங்கு சிறுவன் நுளம்பு வலையில் தலை இருகியவாறு கிடந்ததை கண்டு அதர்ச்சியடைந்ததுள்ளனர்.

இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளது.

இச்சிறுவனின் மரணம் தற்கொலையா அல்லது விளையாட்டினால் வந்த விபரீதமா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X