2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

புத்திரசிஹாமணிக்கு கொலை அச்சுறுத்தல்

A.P.Mathan   / 2013 ஜனவரி 10 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சரும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வி.புத்திரசிஹாமணிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டில் புத்திரசிஹாமணி தெரிவித்துள்ளதாவது...

கடந்த செவ்வாய்க்கிழமை பகல் கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்தபொழுது தனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அந்தத் தொலைபேசியில் மறுமுனையில் பேசியவர் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் என தான் அடையாளம் கண்டுகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தான் அண்மையில் ஊடகமொன்றில் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாகவும் தகாத வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் தன்னை நீண்ட நாட்களுக்கு வாழவிடமாட்டேன் என்று பழனி திகாம்பரம் தெரிவித்ததாகவும் மேலும் அந்த முறைப்பாட்டில் வீ.புத்திரசிஹாமணி தெரிவித்திருப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0

  • chandrean Thursday, 10 January 2013 03:11 PM

    ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவனும் மண்ணுக்குள்ள, இவங்க எல்லாம் எம்மாத்திரம்...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X