2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பேராதனையில் வீதி கீழிறங்கியது: மலையகத்தில் மண்சரிவு அபாயம்

Kanagaraj   / 2013 ஜனவரி 10 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி - பேராதனை வீதியில் பேராதனை பல்கலைகழகத்திற்கு அண்மையில் வீதி சுமார் 10 அடி ஆழத்திற்கு கீழிறங்கியுள்ளதுடன் சுமார் 10 அடி தூரத்திற்கு மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,மலையகத்தில் இன்னும் 24 மணிநேரத்திற்குள் மண்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.

பேராதனை பிரதான வீதி கீழிறங்கியமையினால் அந்த வீதியினூடாக வாகனங்களில் செல்வதை குறைத்துக்கொள்ளுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மலையகத்தில் குறிப்பாக கண்டி,நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு,பாரிய கற்கள் சரிந்து விழுதல், மண்திட்டு சரிந்துவிழுதல் போன்ற அபாயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X