2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் நீரோடை சுத்திகரிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு

நுவரெலியா நகரக்குள் செல்லும் நீரோடையில் காணப்படும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி நீரோடையில் குறிப்பிட்ட சில காலமாக சுத்திகரிப்பு பணி மேறகொள்ளப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக நுவரெலியா நகரில் உள்ள சந்தனலால் கருணாரத்ன மாவத்தையில் அமைந்துள்ள 10 வீடுகளும் சென் அன்றூஸ் வீதியில் அமைந்துள்ள கடைத் தொகுதியும் முற்றாக நீரிழ் மூழ்கின.

இதனையடுத்து இன்று மேற்படி நீரோடையில் சுத்திகரிப்பு பணி முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாநகர சபையின் நகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே மேற்பார்வையின் கீழ் இச்சுத்திகரிப்பு பணி முன்னெடுக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X