2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.எப்.எம். தாஹிர்


ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய பதாகையொன்று அப்புறப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரவளை மாநகர சபை உற்பத்தி திறன் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கு ஜனாதிபதி மூலம் விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விருது வழங்குவதையும், பண்டாரவளை மாநகர முதல்வர் விருது பெறுவதையும் உள்ளடக்கிய பதாகை ஒன்று நேற்று பண்டாரவளை நகரில் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை அப்புறப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கண்டித்து மாநகர ஊழியர்கள், நகரவாசிகள் இணைந்த 100 இற்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட பண்டாரவளை மாநகர சபையின் முதல்வர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கலந்துரையாடியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X