2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கட்டுகஸ்தோட்டை மொலகொட பியதஸ்ஸீ வித்தியாலய மாணவர்கள் கல்வியை தொடர ஏற்பாடு மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மண்சரிவு அபாயம் காரணமாக காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள கட்டுகஸ்தோட்டை மொலகொட பியதஸ்ஸீ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 750 மாணவர்களும் அவர்களது கல்;வியைத் தொடருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பாடசாலைக்கு மாணர்கள் மிகவும் குறைவாகவுள்ள பாடசாலையில்; கட்டிடங்களை பயன்படுத்தி தற்காலிகமாக இம்மாணவர்களுக்கு இடம் கொடுக்குமாறும் பெற்றோர்கள் கோருகின்றனர்.

இந்நிலையில், இது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை பெற்றோர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பூஜாபிட்டிய பிரதேசசபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X