2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி பிரதேச மக்களுக்கு பாரிய சேவைகளையாற்றிய சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கண்டியைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் பல இணைந்து இந்த கௌரவிப்பு நிகழ்வை நடத்தின.

மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  கண்டி நகரின் சிரேஷ்ட பிரஜைகளாக இருந்து சமூகத்திற்கு பாரிய சேவைகளைப் புரிந்த நால்வர் 'வாழ்த்த வேண்டியவர்கள் வாழ்தப்பட வேண்டும்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரபல கிரிகட் வீரர் முரளீதரனின் தந்தையான சமூக ஜோதி எஸ்.முத்தையா, கண்டியில் 50 வருடங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் டாக்கர்.சமத் இஸ்மாயில், மற்றொறு சமுக சேவகரும் நீண்டகாலமாக வைத்தியராகக் கண்டியில் கடமை புரிந்து வரும் வைத்தியர் நிஹால் கருணாரத்ன, 1970களில் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த கல்ப் நியூஸ் ஊடகத்தின் ஸ்தாபகர் கார்ல் மலர் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X