2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஹட்டன் வெலிஓயா புதுக்காடு இலக்கம் இரண்டு பாடசாலை

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சுவர்ணஸ்ரீ


ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வெலிஓயா புதுக்காடு இலக்கம் இரண்டு பாடசாலை அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருவதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் - வட்டவளை பிரதான பாதையில் செனன் தோட்டத்துக்கு அருகிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்தப் பாடசாலையில் தரம் ஐந்து வரை வகுப்புக்கள் உள்ளதுடன் 80 மாணவர்கள் வரை கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பாடசாலைக்கு சீடா திட்டத்தின் மூலம் கட்டிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இப்பாடசாலையில் உரிய பராமரிப்புக்கள் இடம்பெறாத காரணத்தினால் இப்பாடசாலை  வகுப்பறை கட்டிடங்களிலுள்ள கதவுகள், சாளரங்கள், தரை என்பன சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ஆசிரியர் விடுதிகள் பாழடைந்துள்ளன. மலசலக்கூடங்களின் கதவுகள் அகற்றப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் இல்லை.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இப்பாடசாலையின் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் இந்தப்பாடசாலையில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி சென்றபோதும் இதுவரை எந்த உதவிகளும் தமக்கு கிடைக்கவில்லையென பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாடசாலையின் விவகாரம் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X