2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பலி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கிஷாந்தன்

ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தவறி வீழ்ந்து பலியான சம்பவம் திம்புள்ளை – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, மூங்கில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை, நோனாத்தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மோகனரூபன் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு ஆற்றில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேற்படிச் சிறுவன் கொட்டகலை, மூங்கில் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையிலே இவ்வாறு ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .