2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆற்றில் மூழ்கிய பிக்குவை தேடும் பணி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

தெல்தெனிய ஒருதொட்ட ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், ஒருதொட்ட ஹன்கேவெல விஹாரையைச் சேர்ந்த ஞானானந்த தேரர் (வயது 20)  என்ற பிக்குவே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

உளுகங்கை பகுதியிலிருந்து தெல்தெனிய - விக்டோரியா நீர்த்தேக்கம் நோக்கிச் செல்கின்ற இந்தச் சிற்றாற்றில் 4 பிக்குகள் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது திடீரென பெருக்கெடுத்த நீரினால் இந்த 4 பிக்குகளில்  ஒருவர் அள்ளுண்டுள்ளார்.

இந்த நிலையில், ஏனைய 3 பிக்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போயுள்ள பிக்குவை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை  தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .