2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விளையாட்டுத் துப்பாக்கியை காண்பித்து கொள்ளை: நால்வர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத் துப்பாக்கிய காண்பித்து அச்சுறுத்தி சுமார் 7 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் சகோதரர்கள் இருவரும் அடங்குகின்றனர். ஏனைய இருவரும் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் என்றும் நால்வரும் உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்வம் பலாங்கொடையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை, ராசகலை மெத்தகந்த தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை கொழுந்து பணத்தையே சந்தேக நபர்கள் நால்வரும் இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மூன்று இலட்சம் ரூபாவை மீட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து கத்தி, விளையாட்டுத் துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .