2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பள்ளிவாசல் சேதம்

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலில் இன்று சனிக்கிழமை அதிகாலை தேசப்படுத்தப்பட்டுள்ளது என கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் கதவு மற்றும் பிரதான அறை ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிவாசலினுள் அதிகாலை பொழுதில் நபர்கள் வந்ததை அங்கு கடமைபுரிபவர் அவதானித்துள்ளார். இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தததை தொடர்ந்து பள்ளிக்குள் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் பள்ளிவாசலில் இருந்து  எவ்வித பொருட்களும் திருடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .