2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தலவாக்கலை த.ம.வி. மாணவர்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று திங்கட்கிழமை (04) கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மேல் கொத்மலை திட்டத்தின் மூலம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 9 கட்டிடங்கள் நிர்மாணித்துத்  தருவதாக கூறி தற்போது 3 கட்டிடங்கள் மாத்திரமே நிர்மாணித்துக் கொடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கட்டிக்கொண்டிருக்கும் ஒரு கட்டிடம் பாடசாலைக்கென கூறி அது வேநு ஒரு குழுவிடம் கைமாறியிருப்பதாகவும் தற்போது பாடசாலைக்கு இருக்கின்ற வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .