2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இளவரசரின் விஜயம் மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை எற்படுத்த வேண்டும்: சார்ள்ஸ்

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

பிரித்தானிய இளவரசரின் இலங்கை விஜயம் மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை எற்படுத்த வேண்டும்.எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டில் இளவரசர் கலந்து கொள்ள வருகை தருகின்றதை நாம் வரவேற்கின்றோம் அதேவேளை அவர் எமது மலையக மக்களின் வாழ்க்கை தரத்தையும் பாhவையிட வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னனியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இருநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து எமது மக்கள் உங்களின் அரசாங்கத்தின் கீழ் இயங்கிய தேயிலை தோட்டங்களில் நாட்கூலிகளாக வேலை செய்வதற்காக  கொண்டுவரப்பட்டார்கள் அன்று முதல் இன்றுவரை நாம் இலங்கையில் வாழ்ந்து வருகின்றோம்.

இலங்கையை ஆண்டு வந்த அரசாங்கங்கள் எமது மக்களின் வாழ்க்கை தரத்தை படிப்படியாக உயர்த்தியுள்ளன குறிப்பாக இந்த அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எமது பகுதியில் முன்னெடுத்துவருகின்றது.எமது மக்களின் முக்கிய விடயமாக விளங்கும் குடியிருப்புகள் தொடர்பாக இன்னும் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதை மிகுந்த மனவருத்தத்துடனேனும் தாங்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய தேவை அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உண்டு.

 எனவே, தாங்கள் மலையகத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன இந்த நிலையில் தாங்கள் எமது மக்களின் குடியிருப்புகளை பார்வையிட வேண்டும்   எனவும் எமது அரசாங்கம் இந்த மக்களின் குடியிருப்புகள் தொடர்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் தங்களின் பங்களிப்பையும் வழங்கி எமது மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .