2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண (சா/த) தமிழ்மொழி வினாத்தாள்களில் குளறுபடி

Kanagaraj   / 2013 நவம்பர் 11 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண பாடசாலைகளில் தற்போது முன்னோடி பயிற்சிகள்  நடைபெறுகின்றன.

இதில், கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட"தமிழ் மொழியும் இலக்கியமும்" வினாத்தாள்களில் குளறுபடிகள் இருப்பதாக பரீட்சார்த்திகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி-ii ", "தமிழ் மொழியும் இலக்கியமும்  , பகுதி-iii", ஆகிய வினாத்தாள்களிலேயே குளறுபடிகள் காணப்படுகின்றன.

"தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி-ii இல்", இரண்டாம் பிரதான வினாவில் பகுதி வினாவாக (ஈ) பிரிவில் வரவேண்டிய வினா, பகுதி-iii இல் இரண்டாம் பிரதான வினாவில் 4 ஆவது பகுதி வினாவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 'தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி-iii இல்", இரண்டாம் பிரதான வினாவில் 4 ஆம் பகுதி வினாவாக  வரவேண்டிய வினா, பகுதி-ii இல் இரண்டாம் பிரதான வினாவில்  'ஈ' பிரிவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் கல்வித் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட குளறுபடியான வினாத்தாள்களினால் இன்று திங்கட்கிழமை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

'தமிழ் மொழியும் இலக்கியமும்' பகுதி-i

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .