2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊவா மாகாண உற்பத்தி திறன் விருது விழா

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம். தாஹிர்


ஊவா மாகாண உற்பத்தித் திறன் விருது 2011-2012 வழங்கும் விழா மாகாண நூலக சேவைகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊவா மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் நலன் கருதி தயாரிக்கப்படும் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை திட்டமிடும் போது நிலவிய குறைபாடுகள் மீது மேலான கவனம் செலுத்தி அணுகு முறையொன்றை தயாரிப்பதற்கும் அவர்களுடைய திறமைகளை முன்மாதிரியாக கொண்டு மாகாண அரச சேவைகளை பிரபல்யப்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

இந்த விருது வழங்கும் செயற்பாடு ஊவா மாகாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.   

இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்தியூவ், முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, ஊவா மாகாண பிரதான செயலாளர் பீ.பீ.அமரசேகர, மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X