2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்து விபத்து; நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததால், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட்டுக்குச்  சென்றுகொண்டிருந்த  முச்சக்கரவண்டியே பள்ளத்தில் விழுந்துள்ளது. மஸ்கெலியா - ஹட்டன் பிரதான வீதியிலுள்ள ரொக்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியிலுள்ள  50 அடி பள்ளத்தில் இம்முச்சக்கரவண்டி விழுந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி, குழந்தையொன்று மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், படுகாயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X