Sudharshini / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
காவத்தை, அவுப்பை தோட்டம் யாயின்ன பிரிவில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கும் அதே தோட்டப்பிரிவில் வசிக்கும் தொழிலாளர் குடும்பத்திற்;குமிடையில் நேற்று(27) ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் உட்பட மூவர் படுகாயம் அடைந்த நிலையில் காவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மேற்படி தோட்டப் பிரிவில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தருக்கும் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்குமிடையில் இருந்த தனிப்பட்ட விரோதம்; வாய் தகரா மாறி, பின்னர் கைகளப்பாகியுள்ளது.
இதனையடுத்து, வெளிக்கள உத்தியோகத்தரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் குடும்பத்தினரை தாக்கியதோடு அவரின் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி என்பவற்றையும் சேதமாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரச்சினை கலவரமாக மாறும் என்று தொழிலாளர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago