2026 மே 15, வெள்ளிக்கிழமை

சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்

Sudharshini   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் மாணிக்கக்கல் அகழ்வு, மண் அகழ்வு மற்றும் சட்ட விரோத மண் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பான  விஷேட கூட்டமொன்று நேற்று(27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்பு, அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் உரியதாகும். மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதேவேளை சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அத்தகைய நடவடிக்கைகளைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிக்கையொன்றைத் தமக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சூழலை பாதிக்கும் எத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க கூடாது. மாவட்டத்தில் மகாவலி காணிகள தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள், இரத்தினக்கல் அகழ்வதால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள், எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலைக் காணியை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவது உட்பட பல முக்கிய விடயங்களை அரச அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இக்கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான தலத்தா அத்துக்கோரளை, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, பவித்ரா வண்ணியாராச்சி, வாசுதேவ நாணயக்கார, ஜானக வக்கும்புர மற்றும் மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள், பிரதேச சபை தவைவர்கள் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அபிவிருத்திப் பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .