2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

தன்னந்தனியாக பஸ்ஸில் பயணித்த சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2015 மார்ச் 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ


உறவினர்கள், நண்பர்களின்றி 50 ரூபாய் பணத்துடன் தன்னந்தனியாக பஸ்ஸில் பயணித்த 10 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று நோர்வூட்டில் சனிக்கழமை(28) இடம்பெற்றுள்ளது.


பொகவந்தலாவை நகரத்திலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸொன்றிலே மேற்படி சிறுமி பயணித்துள்ளார்.


தனது தந்தை மது அருந்திவிட்டு தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்தி வந்ததாகவும் இதனால் தான் வெளியே செல்ல முற்பட்டதாகவும் மேற்படி சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சிறுமியின் பெற்றோரை அழைத்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

தந்தையின் துன்புறுத்தல் காரணமாக இச்சிறுமியின் சகோதரனும்; (வயது -14) கடந்த வருடம் வீட்டைவிட்டு வெளியேறி கொழும்புக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .