Sudharshini / 2015 மார்ச் 02 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
கொடக்கவெல நகரில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இனந்தெரியாத சிலர் தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளதாக கொடக்கவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மதுபானசாலையிலிருந்த உரிமையாளர் மற்றும் சேவையாளரும் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொடக்கவெல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடிவருவதாகவும், மேலதிக விசாரணைகளை கொடக்கவெல மற்றும் இரத்தினபுரி பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago