2026 மே 15, வெள்ளிக்கிழமை

இரட்டை புகையிரத பாதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Gavitha   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டியிலிருந்து பேராதனை வரைக்குமான இரட்டைப் புகையிரதப் பாதை அமைப்பின் போது, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு அல்லது பகுதியளவில் உடைக்கப்பட்ட வீடுகளை பூரணப்படுத்திக் கொள்வதற்கு இடம் அளிக்குமாறு சபை முதல்வரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பனித்துள்ளார்.

குறித்த பிரதேசத்துக்கு திங்கட்கிழமை (02) சென்று அம்மக்களை சந்தித்த போதே, அமைச்சர் இவ்வாறு பனித்துள்ளார்.
கடந்த அரசு காலத்தில் கண்டியிலிருந்து பேராதனை வரையிலான புகையிரதப் பாதை விஸ்தரிப்பு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்தனர். இவர்கள் தமக்கு நியாயம் பெற்றுத் தரும்படி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவருமான லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக மக்கள் விடுத்த மேற்படி வேண்டுகோள் தொடர்பாக அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த அமைச்சர், பகுதியளவில் தமது வீடுகள் உடைக்கப்பட்டர்களுக்கு அவற்றைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கும் முற்றாக வீடுகளை இழந்தவர்களுக்கு புகையிரதப் பகுதிக்குரிய ஒதுக்குக் காணிகளில் புதிதாக வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கும்; வசதிகள் செய்து கொடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளை பனித்துள்ளார்.

நீண்டகால குத்தகை அடிப்படையில் அவற்றைப் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்ததன் பயனாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில் அடிப்படையற்ற விதத்தில் தமது குடியிருப்புக்கள் அகற்றப்பட்டது மட்டு மல்லாது சிலரது கழிவறைகள் அகற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றுத் திட்டங்கள் வழங்கப்படாத நிலையில் நீண்டகாலம் தாம் பாதிக்கப்பட்டு நியாயம் வழங்கப்படாது இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த விடயமாக அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தாம் நன்றி கூறுவதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .