Sudharshini / 2015 மார்ச் 03 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான சீகிரியாவின் பளிங்கு சுவரில், தனது பெயரை எழுதிய மட்டக்களப்பை சேர்ந்த சின்னதம்பி உதேனி (23) என்ற யுவதிக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ ரம்யகுமார இரண்டு வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தனது தோழர்களுடன் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த குறித்த யுவதி, சீகிரியாவின் கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (02) குறித்த யுவதியை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago