Kogilavani / 2015 மார்ச் 06 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
'எங்களுடைய கோரிக்கைக்கு அமைவாகவே மலையக மக்கள்இந்த அரசாங்கததுக்கு வாக்களித்தார்கள். எங்களை நம்பி இருப்பவர்களுக்காக தொழிற்சங்க பேதமின்றி செயல்படுவோம்' என தோட்ட உட்கட்டமைப்ப அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று வியாழக்கிழமை(5) தெரிவித்தார்.
'ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.
டயகம, நியூபோர்ட்மோர் டிவிசனில் வியாழக்கி அன்று நடைபெற்ற தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றுகையில்,
இதில் மக்களுக்கு தேவையான மிக முக்கியமான வேலைத்திட்டங்களை இனங்கண்டு செயல்படவுள்ளோம். மலையக மக்களுக்கு வீடு இல்லாத பிரச்சினையே மிக முக்கியமான பிரச்சினையாகும். கடந்த காலங்களில் இப்பிரச்சினை இழுப்பறியாக இருந்துள்ளது.
தலா 12 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வீடானது, சகல அடிப்படை வசதிகளையும் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் இவ்வீடுகள் இலவசாமாக கையளிக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago