Sudharshini / 2015 மார்ச் 10 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் நபரொருவர், தனது சொந்த வீட்டுக்கே தீ வைத்த சம்பவம் தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்தவர்களுக்கும் இவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குடிபோதையில் இருந்த இவர், தனது சொந்த வீட்டுக்கே தீ வைத்துள்ளார். தீயினால் வீட்டின் அறையொன்று முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் சமயலறை பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீயை வீட்டிலிருந்தவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இவ்வீட்டில் மேற்படி நபரின் 5 பிள்ளைகளும் அவரது தாயாரும் வசித்து வந்துள்ளனர். இவரது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.
இந்நபர், தினமும் குடித்து விட்டுவந்து வீட்டிலுள்ளவர்களுடன் தகராரில் ஈடுபடுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago