2026 மே 15, வெள்ளிக்கிழமை

சீதாவக்கபுரயில் ரூ.450 இலட்சம் செலவில் புதிய தபால் அலுவலகம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

சுமார் 450 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவிசாவளை, சீதாவகபுர புதிய தபால் காரியாலயத்தை தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நேற்று திறந்து வைத்தார்.

நூறு வருடங்களுக்கு மேலாக பழமைவாய்ந்த கட்டிடத்தில் இயங்கிய  இந்த தபால் அலுவலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய ஒரு கட்டிடம் கிடைத்து உள்ளதுடன் இக்காரியாலயம் மூலம் புதிய சேவைகள் பல, மக்களுக்கு வழங்க உள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

தபால் திணைக்களம் இலங்கையில் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களைக் கொண்டுள்ளது. இதனால், நான் ஆரம்பத்தில் இவ்வமைச்சை பொறுப்பேற்க சற்று யோசித்தேன். தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொழிற்சங்கங்கள் இருந்த போதும். மக்கள் சேவையில் வேறபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாக சேவையாற்றுவார்கள் என்று நான் நம்புகின்றேன் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த வைபவத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஞ்ஜன குணவர்தன,  தபால் அமைச்சின் செயலாளர் ஏ.அப்துல் மஜீத், தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன, சீத்தாவக்க பிரதேச சபையின் தலைவர் பிரேமலால் பிந்து ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .