Kogilavani / 2015 மார்ச் 13 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்ததுடன் அவரது உரையை கேட்பதற்காக நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தோம்.
ஆனால், எமது சமூகத்தைப்பற்றியோ அல்லது எமது வரலாற்றை பற்றியோ அவர் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. நான் அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் இவ்விடயம் எனக்கு மனவேதனையை தருகின்றது.
இந்திய பிரதமருடன் நேரடி சந்திப்பில் ஈடுப்படும்போது இவ்விடயம் தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன்' என குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago