2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

நூறுநாள் திட்டத்தில் நல்லாட்சிக்கான அத்திபாரத்தையே இட முடியும்

Kogilavani   / 2015 மார்ச் 15 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அரசாங்கத்தின் நூறுநாள் வேலை திட்டம் மூலம் நல்லாட்சிக்கான அத்திபாரத்தை மட்டுமே இட முடியும் என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அக்குறணை தபால் நிலைய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(14) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார், இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'முஸ்லிம் பள்ளிவாயல்களில் நடைமுறை சிக்கல்கள் அதிகமுள்ளன. குறிப்பாக பதிவு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தையும் இயன்றவரை தீர்த்துக்கொள்ளவதற்கு வசதியாக நடமாடும் சேவையை நடத்த உள்ளோம்.

நீண்டகாலமாக ஹஜ் யாத்திரை தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் காலங்களில் குறைந்த செலவில் கூடுதலானவர்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

இதுநாள் வரை கோட்டா முறை ஒன்று பின்பற்றப்பட்டு வந்ததது. கோட்டாவை அதிகரிப்பதன் மூலம் குறைந்த செலவில் கூடுதலானவர்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்ப முடியும்.

தற்போதைய ஆட்சி ஒரு தற்காலிகமானது. ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். அதற்குப்பின் தேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கமே நிறந்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .