2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

கையெழுத்து வேட்டை

Kogilavani   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி, பத்து இலட்சம் பேரிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையொன்று நுவரெலியா மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில், ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட நிலையில், கையெழுத்து சேகரிக்கும் மேடையை நோக்கி, இனந்தெரியாதோர் சிலரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .