2026 மே 15, வெள்ளிக்கிழமை

மாவாவுடன் கைதான இளைஞனை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை

Kanagaraj   / 2015 மார்ச் 17 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

தலவாக்கலை நகரில் மாவா எனும் போதைப்பொருளுடன்  கைதான இளைஞனை,  நுவரெலியா  மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக  தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை கல்கந்தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞனையே பொலிஸார் கடந்த சனிக்கிழமை( 14) மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞனிடம் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவரை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அவரிடமிருந்து மாவா என்ற போதை பொருளை கைப்பற்றியுள்ளனர். 

இதனையடுத்தே அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .