Sudharshini / 2015 மார்ச் 17 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கோகுலன்
வெலிமடை பிரதேசத்துக்குட்பட்ட கெப்பட்டிபொல- ஹப்புத்தளை பிரதான வீதியில், கெப்பட்டிபொலை ஹெரபெத்த பகுதியில் சுரங்கப்பாதை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சுரங்கபாதை வீதியிலிருந்து ஒரு அடி தூரத்தில் அமைந்துள்ளதோடு சுரங்கம் சுமார் 20 மீற்றர் நீளம் கொண்டது.
இச்சுரங்கத்தின் உட்பகுதியில் வலது மற்றும் இடது பகுதிகளிலும் இரு சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளன. இச்சுரங்கம், வலகம்ப மன்னன் காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுரங்கப்பாதையின் ஊடாக தீயசக்திகள் ஊருக்குள் ஊடுறுவதாக கருதி, 1953ஆம் ஆண்டளவில் விசேட பூஜைவழிபாடுகளை நடத்திவிட்டு அச்சுரங்கத்தை மக்கள் மூடிவிட்டதாகவும் வரலாற்று கதைகள் கூறுகின்றன.



5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago