2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

பிலிமத்தலாவையில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

Kanagaraj   / 2015 மார்ச் 17 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 11 இலட்சத்து 60 அயிரம் ரூபாவை கண்டி பிலிமத்தலாவ நகரத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (16) மாலை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலிமத்தலாவை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து வங்கியில் இடுவதற்காக பெண்ணொருவர் இப் பணத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் அப் பெண் பணத்தை கொண்டு செல்லும் வழியில் முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆயுத முனையில் இப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .